ஆந்திர பிரதேசம்: கஞ்சா கடத்திய 4 பேர் கைது

ஆந்திர பிரதேசத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-22 01:30 GMT

கோப்புப்படம்

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேச மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு (ஏஎஸ்ஆர்) மாவட்டத்தின் சிலேரு போலீசார் கஞ்சா கடத்திய இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒரு பொறியியல் பட்டதாரி உட்பட நான்கு பேரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா, மூன்று மொபைல் போன்கள், 750 ரூபாய் ரொக்கம் மற்றும் தெலுங்கானா மாநில பதிவெண் கொண்ட கார் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜே ராமகிருஷ்ணா கூறும்போது குற்றவாளிகள் சிலேருவில் இருந்து பத்ராசலம் வழியாக ஐதராபாத்துக்கு காரில் கஞ்சாவை கடத்தினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாவார்கள். விசாகப்பட்டினத்திற்கு சுற்றுலாப் பயணிகளாக வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சாவை வாங்குகின்றனர் என்று கூறினார்.

மேலும் என்டிபிஎஸ் சட்டத்தின் 8 (சி) பிரிவு 20 (பி) (ii) (பி) மற்றும் பிரிவு 25 ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்