ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்: பா.ஜ.க.வின் கொள்கையில் நம்பிக்கை உள்ள எந்த தலைவரும் எங்களுடன் இணையலாம் மத்திய மந்திரி கைலாஷ் சவுத்ரி சொல்கிறார்

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

Update: 2023-05-16 22:15 GMT

ஜம்மு, 

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

அசோக் கெலாட் அரசுக்கு எதிராக 5 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட சச்சின் பைலட், இம்மாத இறுதிக்குள் தனது கோரிக்கைகளை ஏற்கவிட்டால் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் காஷ்மீரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி, பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் மோதல் குறித்து பேசி னார்.

அப்போது அவர் "பைலட் மற்றும் கெலாட் இடையேயான மோதலின் சுமைகளை ராஜஸ்தானின் சாமானிய மக்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கெலாட் தனது நாற்காலியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்" என கூறினார்.

தொடர்ந்து அவரிடம் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் பைலட் பா.ஜ.க.வில் சேருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "பா.ஜ.க.வுக்கு வருவதற்கு அடிமட்டத் தொடர்பைக் கொண்ட எவரையும் நிராகரிக்க முடியாது. பா.ஜ.க.வின் கொள்கையில் நம்பிக்கை உள்ள எந்த தலைவரும் எங்களுடன் இணையலாம்" என பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்