லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இணைய முகப்பை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்
புதுடெல்லி,
மத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதிய இணைய முகப்பை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:
இன்று பாதுகாப்புத் துறையில் நாம் சுயசார்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், மோசடிகளுக்கான வாய்ப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. ஊழல் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகள் ஒரு பணி முறையில் விரைவாக முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் .
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது சேவையை கட்டியெழுப்புவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளுடன் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு வாரம் இணைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.