ஒடிசாவில் பிடிபட்ட மற்றொரு உளவு புறா..!!

ஒடிசாவில் மீனவர்களின் படகில் மற்றொரு உளவு புறா பிடிபட்டது.

Update: 2023-03-16 20:29 GMT

புவனேஸ்வர்,

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் பாரதிப் கடற்கரையில் மீனவர்களின் படகில் சந்தேகத்திற்குரிய ஒரு புறா, கடந்த 8-ந்தேதி பிடிபட்டது. புறாவின் காலில் கேமரா போன்ற பொருளும், சிறிய 'சிப்'பும் பொருத்தப்பட்டிருந்ததால் அதை பிடித்த மீனவர்கள் போலீசில் ஒப்படைத்தனர். அந்த புறா மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்த மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் மேலும் ஒரு உளவுப் புறா பிடிபட்டுள்ளது. அந்த புறா நான்பூர் கிராமத்தில் சிக்கியது.

அதன் காலில் வெண்கலம் மற்றும் பிளாஸ்டிக் வளையங்கள் மாட்டப்பட்டிருந்தது. மேலும் அதன் காலில் ரெட்டி வி.எஸ்.பி. டி.என் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 31 என்ற எண்ணும் எழுதப்பட்டிருந்தது.

ஒரு வார இடைவெளியில் ஒடிசாவில் 2-வது உளவுப் புறாக்கள் பிடிபட்டுள்ளது பரபரப்பாகி உள்ளது. போலீசார் அந்த புறாவை கைப்பற்றி, உளவு பார்ப்பதற்காக அந்த புறா அனுப்பப்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்