பஞ்சிகல்லு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு; அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்

பண்ட்வால் அருகே பஞ்சிகல்லு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.

Update: 2022-07-11 15:28 GMT

மங்களூரு;

கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பலபகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதி அடைந்துள்ளனர். கடந்த 6-ந் தேதி பஞ்சிகல்லுவை அடுத்த முகுடா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 3 பேர் இறந்தனர். இதனால் அது விபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பஞ்சிகல்லு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு வந்தனர். அப்போது நிலச்சரிவில் சிக்கி இருந்த 4 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். எனினும், லேசான காயங்கள் ஏற்பட்டதால், அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்