பாரீஸ் நகரில் இருந்து டெல்லி வரும் வழியில் விமானத்தில் சிறுநீர் கழித்த மற்றொரு சம்பவம் அம்பலம்

பாரீஸ் நகரில் இருந்து டெல்லி வரும் வழியில் விமானத்தில் சிறுநீர் கழித்த மற்றொரு சம்பவம் அம்பலமாகியுள்ளது.

Update: 2023-01-06 00:57 GMT

புதுடெல்லி,

கடந்த நவம்பர் 26-ந் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு ஆண் பயணி, ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம், 2 நாட்களுக்கு முன்பு வெளியே தெரிந்து பரபரப்பை உண்டாக்கியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. கடந்த டிசம்பர் 6-ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி ஒருவர், சக பெண் பயணி போர்த்தியிருந்த போர்வையில் அதேமாதிரி குடிபோதையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் விமானத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

விமானம் டெல்லியில் தரையிறங்கியவுடன் போலீசார் அந்த ஆண் பயணியை பிடித்தனர். பின்னர் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பரஸ்பரம் சமாதானம் ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு ஆண் பயணி வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்