தெலுங்கானாவைச் சேர்ந்த மேலும் ஒரு பி.ஆர்.எஸ். எம்.பி. இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.;
புதுடெல்லி,
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தோல்வி அடைந்த பிறகு, அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் ஆளும் காங்கிரஸ் கட்சியிலும், மேலும் சிலர் பா.ஜ.க. கட்சியிலும் இணைந்து வருகின்றனர்.
நேற்றைய தினம் நாகர்குர்நூல் நாடாளுமன்ற தொகுதியின் பி.ஆர்.எஸ். எம்.பி. பொதுகண்டி ராமுலு, அவரது மகன் பாரத் பிரசாத் மற்றும் சில பி.ஆர்.எஸ். கட்சியினர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து இன்று மற்றொரு பி.ஆர்.எஸ். எம்.பி.யான பி.பி.பட்டீல் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
டெல்லியில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் தருண் சுக் ஆகியோர் முன்னிலையில் பி.பி.பட்டீல் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.பி.பட்டீல், பிரதமர் மோடியிடம் இந்தியாவின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை இருப்பதாகவும், அவர் உலகின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த தலைவர் என்றும் தெரிவித்தார்.