புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ.250 அறிவிப்பு...!

பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.;

Update: 2024-01-12 10:39 GMT

புதுச்சேரி, 

புதுச்சேரியில் கடந்த 2022-ம் ஆண்டில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 10 பொருட்களைக் கொண்ட பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கடந்த 2023 ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பிற்குப் பதில் ரூ.470 வழங்கப்பட்டது. இந்தத் தொகை நேரடியாகப் புதுச்சேரி மக்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இந்தாண்டும் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பைப் புதுச்சேரி அரசு வெளியிட்டது. இதில் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த தொகை புதுச்சேரி மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ள ரூ.500-ஐ சேர்த்து கூடுதலாக ரூ.250 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் உள்ள 3,38,761 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.750 பொங்கல் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்