கணவனுடன் கள்ளத்தொடர்பு: பெண்ணை கூலிப்படையை ஏவி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி

கணவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த் பெண்ணை கூலிப்படையை வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-05-30 09:55 GMT

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கோண்டாப்பூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவரது கணவர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது அந்த பெண்ணும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், காயத்ரி பாதிக்கப்பட்ட பெண்ணை கோண்டாப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்தார், மேலும் அவர் பிப்ரவரி 2022 வரை அவர் தம்பதியினருடன் தங்கி இருந்தார்.

ஆனால் அப்போது தனது கணவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருப்பது காயத்ரிக்கு தெரியவந்தது. இது குறித்து காயத்ரி ஏப்ரல் 24 போலீசில் புகார் அளித்து உள்ளார்.இருப்பினும், காயத்ரி சமாதானம் அடையவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை பழிவாங்க திட்டமிட்டார்.

இதற்காக ஒரு கூலிப்படையை அணுகினார். அவர்களை அழைத்து வந்து ஒரு அறையில் தங்கவைத்தார்.பின்னர் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். அவர் வந்து காய்த்ரியுடன் பேசி உள்ளனர். பின்னர் காயத்ரி அந்த பெண்ணை வீட்டின் மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு கூலிப்படை ஆட்கள் அந்த பெண்ணை தாக்கி உள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை துணியால் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தை காயத்ரி தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வேன் என பாதிக்கப்பட்ட பெண்ணை காயத்ரி மிரட்டியுள்ளார்.

பலத்த காயம் அடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் காயத்ரி மற்றும் நான்கு இளைஞர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்