ஆந்திரா அருகே வந்தே பாரத் ரெயில் மீது மீண்டும் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்!
ஆந்திராவில் வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் மீண்டும் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாகபட்டினம்,
முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக 'வந்தே பாரத்' என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில்களை இயக்க, இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஆந்திராவில் விசாகப்பட்டினம் - செகந்திராபாத் சென்ற வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. இதனால் ரெயில் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடந்த 3 மாதங்களில் இந்த வழித்தடத்தில் நடந்த 3-வது தாக்குதலாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.