ஆந்திர பிரதேசம்: டிராக்டர் மீது பைக் மோதி 3 பேர் பலி; ஒருவர் காயம்

பைக்கில், பின்னால் அமர்ந்து கொண்டு பயணித்த 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-11-13 19:04 GMT

காகிநாடா,

ஆந்திர பிரதேசத்தின் காகிநாடா மாவட்டத்தில் தள்ளரேவு மண்டலத்தின் லச்சிபாலம் கிராமத்தில் பைக் ஒன்றில் சிலர் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற பைக் திடீரென்று, டிராக்டர் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. அந்த பைக்கில் 4 பேர் சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.

இதில், பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். உயிரிழந்தவர்கள் ஒலெத்தி ஸ்ரீனு (வயது 28), பெட்டா ஒலெத்தி (வயது 26) மற்றும் பலப்பு பிரசாத் (வயது 24) என தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் எதுர்லங்கா கிராம பகுதியை சேர்ந்தவர்கள். காயமடைந்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்