அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
அந்தமான் நிகோபாரில் ரிக்டர் அளவில் 5.3 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படாது. தீவாக இருக்கும் அந்தமானில் ஏற்படும் பெரும்பாலான நிலநடுக்கம் லேசானதாகவே இருக்கும்.
இதற்கிடையே இப்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அங்கே கேம்ப்பெல் விரிகுடாவில் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிமீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கே இருக்கும் பல கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் பொதுமக்கள் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அந்தமானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.