நகைக்கடையில் திருட்டு நகைகளை மீட்க வந்த சென்னை போலீசாரை தாக்க முயற்சி

சிக்பள்ளாப்பூரில், நகைக்கடையில் திருட்டு நகைகளை மீட்க வந்த சென்னை போலீசாரை தாக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-09-21 22:04 GMT

பெங்களூரு: தமிழ்நாடு சென்னை கொரட்டூர் போலீசார் திருட்டு வழக்கில் கர்நாடகத்தை சேர்ந்த முகமதுகான் என்பவரை கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் முகமதுகான் சென்னையில் திருடிய நகைகளை சிக்பள்ளாப்பூர் டவுன் கங்கமனகுடியில் உள்ள நகைக்கடையில் விற்றதாக கூறி இருந்தார். இதனால் அந்த நகைக்கடையில் இருந்து நகைகளை மீட்கவும், நகைக்கடையின் உரிமையாளர் சீனிவாசை கைது செய்யவும் நேற்று கொரட்டூர் போலீசார் ஒரு காரில் சிக்பள்ளாப்பூர் வந்தனர். ஆனால் அவர்கள் வந்த காரில் வாகன பதிவெண் இல்லை.

இந்த நிலையில் நகைக்கடைக்குள் அதிரடியாக நுழைந்த கொரட்டூர் போலீசார் சீனிவாசை கைது செய்ய முயன்றனர். இதனால் அவர் கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு வந்த பக்கத்து கடைக்காரர்கள் கொரட்டூர் போலீசாரை திருடர்கள் என்று நினைத்து கொண்டு தாக்க முயன்றனர். மேலும் காரின் டயரை பஞ்சராக்கினர். இதுபற்றி அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது சீனிவாசை கைது செய்ய கொரட்டூர் போலீசார் வந்தது தெரியவந்தது. இதன்பின்னர் கொரட்டூர் போலீசாருடன், சீனிவாசை சிக்பள்ளாப்பூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்