பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது அமுல் நிறுவனம்
அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தி உள்ளது.;
குஜராத்,
இந்தியாவில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமுல் நிறுவனம் முக்கிய தயாரிப்பான பால் விலையை உயர்த்தி உள்ளது.விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து, அதை பல்வேறு பால் பொருளாகத் தயாரித்து உள்நாடுகளில் விற்பனை செய்வதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது அமுல் நிறுவனம்
குஜராத்தை தலைமியிடமாக கொண்டு செய்லபடும் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் பால் ,பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதுடன் பால் பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.