சப்-இன்ஸ்பெக்டர் முறைகேடு வழக்கில் கைதான அம்ருத்பாலின் ஜாமீன் மனு தள்ளுபடி; லோக் அயுக்தா கோர்ட்டு உத்தரவு

சப்-இன்ஸ்பெக்டர் முறைகேடு வழக்கில் கைதான அம்ருத்பாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து லோக் அயுக்தா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-11-24 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் 545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்த வழக்கில், ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வினாத்தாள் வைக்கப்பட்டு இருந்த அறையின் சாவியை கொடுத்து வினாத்தாளை திருத்த உதவியது அம்ருத்பால் மீதான குற்றச்சாட்டு ஆகும். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் ஜாமீன் கேட்டு பெங்களூரு கோர்ட்டில் அம்ருத்பால் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜாமீன் கேட்டு லோக் அயுக்தா சிறப்பு கோர்ட்டில் அம்ருத்பால் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அரசு சார்பில் ஆஜரான வக்கீல் அம்ருத்பாலுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்