நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டதால் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு பாஜக சார்பில் இரங்கல் கூட்டம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு!
இன்று அமராவதியில் உமேஷ் கோல்ஹே மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக ஏற்பாடு செய்துள்ளது.;
மும்பை,
மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே (வயது54). இவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை கூறிய பா.ஜனதா முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்குழுக்களில் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் முகநூலில் பதிவிட்டதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் அவர் கடந்த மாதம் 21-ந் தேதி மருந்து கடையை மூடிவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த போது கும்பலால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
உமேஷ் கோல்கே நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதவிகளை பகிர்ந்தற்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரது கொலை மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முக்கிய குற்றவாளி இர்பான் கான், கால்நடை டாக்டர் யுசுப் கான் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று அமராவதியில் உமேஷ் கோல்ஹே மறைவுக்கு இரங்கல் கூட்டம்(சோக் சபா) நடத்த பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஊர்வலம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "இரங்கல் கூட்டத்தில் யாரும் பேச்சு வார்த்தை நடத்த கூடாது, வெறும் இரங்கல் தெரிவிப்பதற்காகவே தவிர, பேச்சுக்காக அல்ல என்று அவர்களிடம் கூறினோம்.
நாங்கள் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளோம். மாநில ரிசர்வ் போலீஸ் படை மற்றும் சுமார் 1,500 பணியாளர்களைக் கொண்ட உள்ளூர் நகர காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்க, எங்கள் பணியாளர்களை பதற்றமான பகுதிகளில் நிறுத்தியுள்ளோம்'' என்று தெரிவிக்கப்பட்டது.