காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய அம்பிகா சோனி
சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் அலுவலகத்தில் அம்பிகா சோனி நேற்று தேசியக்கொடி ஏற்றினார்
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கட்சித் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காத நிலையில், மூத்த தலைவரும், காரிய கமிட்டி உறுப்பினருமான அம்பிகா சோனி தேசியக்கொடியை ஏற்றினார்.
தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்வில் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மோசினா கித்வாய், பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பொருளாளர் பவன்குமார் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், கட்சி தலைமையகத்தில் இருந்து காந்தி அருங்காட்சியகத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாக சென்றனர். கட்சியின் ஆசாதி கவுரவ் யாத்திரையின் ஒரு அங்கமாக இந்த பேரணி நடைபெற்றது.