கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு; பரமேஸ்வர், போலீஸ் மந்திரி ஆனார்

கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி டி.கே.சிவக்குமாருக்கு பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பரமேஸ்வர் போலீஸ் மந்திரி ஆனார். அதிருப்தியில் இருந்த ராமலிங்க ரெட்டிக்கு 2 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-05-29 23:43 GMT

பெங்களூரு:

ராஜினாமா செய்வதாக மிரட்டல்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி கடந்த 20-ந் தேதி அமைந்தது. அன்றைய தினம் ஒரு துணை முதல்-மந்திரி, 8 மந்திரிகள் பதவி ஏற்றனர். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி மீதமுள்ள 24 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதன் மூலம் மந்திரிசபையில் உள்ள மொத்த இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இலாகா ஒதுக்கீடு தொடர்பாக அன்றைய தினமே ஒரு அதிகாரப்பூர்வமற்ற பட்டியல் வெளியானது.

இதை ஆளும் காங்கிரஸ் கட்சி நிராகரித்தது. மூத்த மந்திரியான ராமலிங்கரெட்டி, தனக்கு போக்குவரத்து துறை வேண்டாம் என்றும், அதை விட முக்கியமான இலாகா ஒதுக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார். இல்லாவிட்டால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ராமலிங்கரெட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று கூடுதலா ஒரு இலாகா ஒதுக்குவதாக கூறி அவரை சமாதானப்படுத்தினார்.

கவர்னர் ஒப்புதல்

இதையடுத்து ராமலிங்கரெட்டி தனது அதிருப்தியை கைவிட்டார். இந்த நிலையில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி உள்பட 34 மந்திரிகளுக்கு இலாகாக்களை அரசு ஒதுக்கியது. இந்த பட்டியலை கர்நாடக அரசு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பிவைத்தது.

இதற்கு கவர்னர் கெலாட் ஒப்புதல் வழங்கினார். அதையடுத்து மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து கர்நாடக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

டி.கே.சிவக்குமாருக்கு 2 முக்கிய துறைகள்

இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு மிக முக்கியமான இலாகாக்களான பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2 துறைகளுக்கு தான் பட்ஜெட்டில் மிக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த இலாகா ஒதுக்கீட்டிற்கு இதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு குறித்த விவரம் வருமாறு:-

1. முதல்-மந்திரி சித்தராமையா- நிதி, மந்திரிசபை விவகாரம், பணியாளர்கள்-நிர்வாக சீர்திருத்தம், உளவு பிரிவு, தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் மந்திரிகளுக்கு ஒதுக்கப்படாத இதர துறைகள்.

2. துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்- நீர்ப்பாசனம், பெங்களூரு நகர வளர்ச்சி

3. பரமேஸ்வர்-போலீஸ் (உளவு பிரிவு நீங்கலாக)

4. எச்.கே.பட்டீல்-சட்டம், சட்டசபை விவகாரம், சுற்றுலா

5. கே.எச்.முனியப்பா- உணவு மற்றும் பொதுவிநியோகம்

சதீஸ் ஜார்கிகோளி-பொதுப்பணி

6. ராமலிங்கரெட்டி - போக்குவரத்து மற்றும் இந்து சமய அறநிலையத்துறை

7. எம்.பி.பட்டீல்- தொழில்துறை

8. கே.ஜே.ஜார்ஜ்- மின்சாரம்

9. தினேஷ் குண்டுராவ்- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

10. எச்.சி.மகாதேவப்பா-சமூக நலத்துறை

11. சதீஸ் ஜார்கிகோளி- பொதுப்பணித்துறை

12. கிருஷ்ண பைரேகவுடா- வருவாய்த்துறை

13. பிரியங்க் கார்கே- கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

14. சிவானந்த் பட்டீல்- ஜவுளி, சர்க்கரை, வேளாண் சந்தைகள்

15. ஜமீர்அகமதுகான்- வீட்டு வசதி-வக்பு, சிறுபான்மையினர் நலன்

16. சரணபசப்பா தர்ஷன்பூர்- சிறுதொழில், பொதுத்துறை நிறுவனங்கள்

செலுவராயசாமி-விவசாயம்

17. ஈஸ்வர் கன்ட்ரே- வனம், சுற்றுச்சூழல்

18. செலுவராயசாமி-விவசாயம்

19. எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன்- கனிமவளம், புவியியல், தோட்டக்கலை

20. ரகீம் கான்- நகராட்சி நிர்வாகம்-ஹஜ்

21. சந்தோஷ் லாட்- தொழிலாளர் நலன்

22. சரணபிரகாஷ் பட்டீல்-மருத்துவ கல்வி-திறன் மேம்பாடு

23. ஆர்.பி.திம்மாபூர்- கலால் துறை

24. வெங்கடேஷ்- கால்நடை வளர்ப்பு-பட்டு வளர்ச்சி

25. சிவராஜ் தங்கடகி- பிற்படுத்தப்பட்டோர் நலன், கன்னட கலாசார வளர்ச்சி

26. டி.சுதாகர்- திட்டமிடல் மற்றும் புள்ளியல்

மது பங்காரப்பா-பள்ளி கல்வி

27. நாகேந்திரா- இளைஞர் நலன், விளையாட்டு, பழங்குடியினர் நலன்

28. கே.என்.ராஜண்ணா -கூட்டுறவு

29. பைரதி சுரேஷ் -நகர வளர்ச்சி (பெங்களூரு நீங்கலாக)

30. லட்சுமி ஹெப்பால்கர்-பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலன்

31. மங்கல் வைத்தியா- மீனவர் நலன், துறைமுகம், நீர் போக்குவரத்து

32. மது பங்காரப்பா- பள்ளி கல்வித்துறை

33. டாக்டர் எம்.சி.சுதாகர்- உயர்கல்வித்துறை

34. என்.எஸ்.போசராஜூ- சிறிய நீர்ப்பாசனம், அறிவியல் தொழில்நுட்பம்

Tags:    

மேலும் செய்திகள்