உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-09-15 11:18 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அவர்கள் மலை பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்தனர். இதையடுத்து நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்த கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30 பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். அரை மணி நேரத்திற்கு ஐந்து பேர் வீதம் ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை இரவு சென்னை வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்