சாம்ராட் பிருத்விராஜ்: உத்தரகாண்டிலும் வரி விலக்கு

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-06-02 15:54 GMT

டேராடூன்,

சந்திர பிரகாஷ் திவேதி இயக்கத்தில் மன்னர் பிரித்விராஜ் சவுகான் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'சாம்ராட் பிரித்விராஜ்'. இந்தத் திரைப்படத்தில் ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் குமாரும், அவருக்கு ஜோடியாக 2017ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற மனுஷி சிகில்லரும் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் (ஜூன்-3ஆம்) நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இந்தநிலையில், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாறு 'சாம்ராட் பிருத்விராஜ்' என்ற பெயரில் அக்‌ஷய் குமார் நடிப்பில் நாளை வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்