அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவிப்பு; சரத் பவாருக்கு பின்னடைவு
கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.;
புதுடெல்லி,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக எம்.எல்.ஏ.க்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்திருக்கிறார். இதனால், அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதன்படி, கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், மூத்த தலைவரான சரத் பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு, அணியின் பெயரை தேர்ந்தெடுக்கும்படி சரத் பவார் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார். இதன்படி, வருகிற 7-ந்தேதி பிற்பகல் 3 மணிக்குள், அவர்களுடைய அணியின் பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை தெரிவிக்கும்படி, கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.