பாஜக தலைவர்களின் மனைவிகள் எப்படி குடும்பத்தை நடத்துகிறார்கள்? விலைவாசி உயர்வு குறித்து ஏஐயுடிஎப் தலைவர் விமர்சனம்!

ஏஐயுடிஎப் தலைவர் பதுருதீன் அஜ்மல், ஆளும் கட்சித் தலைவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

Update: 2022-08-06 04:57 GMT

கவுகாத்தி,

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐயுடிஎப்) தலைவர் பதுருதீன் அஜ்மல், ஆளும் கட்சித் தலைவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

சமீப மாதங்களில் விண்ணை முட்டும் பணவீக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசை குற்றம்சாட்டின. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக நேற்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி இறங்கியது.

இந்த நிலையில், பாஜக தலைவர்கள் சாமானிய மக்களின் துன்பங்களில் அக்கறையற்றவர்களாக இருப்பதாகக ஏஐயுடிஎப் தலைவர் பதுருதீன் அஜ்மல், குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது, "இந்தியாவின் பணம் நிதியமைச்சரிடம் உள்ளது. ஒரு தனிநபர் பொருட்களை வாங்க எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை அவர் எப்படி அறிவார்?

நாட்டில் எந்தவொரு மந்திரிக்கும் பணவீக்கத்தால் பாதிப்பு இல்லை. பாஜக எம்.பி.க்கள் தங்கள் மனைவிகளிடம், அவர்கள் சமையலறையை(குடும்பத்தை) எப்படி நடத்துகிறார்கள் என்பதை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பணவீக்கம் விவகாரம், அவர்களின் அரசாங்கத்தை பாதித்துவிடும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்