உப்பள்ளி- மங்களூரு இடையே விமான சேவைவருகிற 10-ந்தேதி முதல் ரத்து
உப்பள்ளி- மங்களூரு இடையே விமான சேவை வருகிற 10-ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து பெங்களூரு, சென்னை, புனே, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் உப்பள்ளி- மங்களூரு இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த விமான சேவை வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இண்டிகோ ஏர்லைன் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. உப்பள்ளியில் இருந்து காலை 6.30 மணிக்கு விமானம் புறப்பட்டு மங்களூருவுக்கு காலை 7.35 மணிக்கு சென்றடையும். பின்னர் மங்களூருவில் இருந்து 8.00 மணிக்கு விமானம் புறப்பட்டு உப்பள்ளிக்கு இரவு 9.05- க்கு வந்தடையும்.
இந்தநிலையில் விமான பயணிகள் வருகை குறைந்த காரணத்தால் உப்பள்ளி- மங்களூரு இடையே இயக்கப்பட்டு வந்த விமான சேவை வருகிற 10-ந் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. இந்த விமானம் சேவையை உப்பள்ளி- புனேவிற்கு இயக்கபோவதாக விமான நிலைய இயக்குனர் பிரமோத் குமார் தாக்கரே தெரிவித்துள்ளார்.