தலைநகர் டெல்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம்
தலைநகர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் இருந்தது.
புதுடெல்லி,
தேசிய தலைநகர் டெல்லியில் இன்றைய வெப்பநிலையானது இயல்பை விட மூன்று புள்ளிகள் குறைவாக 7.3 டிகிரி செல்சியஸாக இருந்ததாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 358 என்ற நிலையில் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததாக தெரிவித்து உள்ளது.