விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் வேலையில் இருந்து நீக்கம்- கைது
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த அவரது நிறுவனமான வெல்ஸ் பார்கோவால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
நியூயார்க்கில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை டெல்லி போலீசார் தெர்வித்து உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளி சங்கர் மிஸ்ராவை போலீசார் தேடி வந்தனர்.
மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் மீது 294 (பொது இடத்தில் ஆபாசமான செயல்), 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல்), 509 (சொல், சைகை அல்லது செயல் ஆகியவற்றை அவமதிக்கும் நோக்கில் செய்தல்)இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் 510 (குடிபோதையில் இருக்கும் நபர் பொது இடங்களில் தவறாக நடத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த அவரது நிறுவனமான வெல்ஸ் பார்கோவால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெல்ஸ் பார்கோ இந்தியாவின் துணைத் தலைவர் சங்கர் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 'ஆழ்ந்த கவலையளிக்கிறது' .இந்த நபர் வெல்ஸ் பார்கோவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி உள்ளது.
கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் துணைத் தலைவராக சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்தார்