வரலாற்றின் மிகப்பெரிய விமான ஒப்பந்தம் : 300 ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம் ?

வணிக ரீதியான விமான வரலாற்றில் ஒரு நிறுவனம் 300 ஜெட் விமானங்களை வாங்கியது இல்லை.

Update: 2022-06-20 09:51 GMT

Image Courtesy : AFP 

புதுடெல்லி,

ஏர் இந்தியா நிறுவனம் 300 சிறியவகை ஜெட் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வணிக ரீதியான விமான வரலாற்றில் ஒரு நிறுவனம் இவ்வளவு அதிகமான ஜெட் விமானங்களை வாங்கியது இல்லை.

அந்த வகையில் இந்த திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் இது மிகப்பெரிய சாதனையாக அமையும். கேரியர் ஏர்பஸ் எஸ்-யின் ஏ320நியோ ஃபேமிலி ஜெட் விமானங்கள் அல்லது போயிங் கோவின் 737 மேக்ஸ் ரக விமானங்களை ஏர் இந்தியா வாங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு இந்த தகவலை ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த 300 விமானங்களும் முழுமையாக கிடைப்பதற்கு 10 ஆண்டுகள் மேல் கூட ஆகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்