அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது... அமித் ஷாவை சந்தித்தபின் ஈபிஎஸ் பேட்டி

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துத்துப்பேசினார்.

Update: 2023-04-27 03:58 GMT

டெல்லி,

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;

*சம்பிரதாய அடிப்படையில் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினோம். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் குறித்து அதிர்ச்சியடைந்தேன். நிதி அமைச்சர் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றோம். ஆடியோ விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

*அதிமுகவிற்கும், அன்னாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். அந்தந்த கட்சிகள் அவரவர்களின் கொள்கையின் அடிப்படையில் செயல்படும். ஒற்றுமையாக செயல்பட்டு எங்கள் கூட்டணியை வெற்றிபெறச்செய்வோம்.

*துரோகம் செய்தவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. துரோகம் செய்தவர்களை தவிர்த்து மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்ப்போம். 

*கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைதுசெய்தது அதிமுக அரசு. கொடநாடு வழக்கில் கைதானவர்களுக்கு திமுக-வை சேர்ந்தவர்கள் ஜாமீன் எடுத்துக்கொடுத்தனர்.

*அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு முழுமையாக தீர்ப்பு வழங்கிவிட்டது. நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டது. அதிமுக எங்கள் பக்கம் தான் உள்ளது.

*அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடைபெறவில்லை. டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக சிஏஜி அறிக்கை கூறவில்லை.

*கடந்த அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்றதாக செல்லும் இடங்களில் மக்கள் கூறுகின்றனர். ஆனால் திமுகவின் இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் கூறுகின்றனர். மேலும், திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். அது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்