மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு - உமா பாரதி நம்பிக்கை

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தான் நம்புவதாக உமா பாரதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-25 21:43 GMT

போபால்,

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) ஒதுக்கீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான உமா பாரதியும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என அவர் தற்போது நம்பிக்கை வெளியிட்டு உள்ளார். பிரதமர் மோடியின் மத்திய பிரதேச பயணத்தை முன்னிட்டு நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில், 'போபால் மண்ணில் பிரதமரை வரவேற்கிறோம். அவர் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் தூதுவர். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு குறித்து அவர் நேர்மறையான சிக்னலை கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக இந்த மசோதாவில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து எதுவும் இடம்பெறாதது குறித்து அவர் ஏமாற்றம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்