மண்டியாவில் விவசாய கண்காட்சி

மண்டியாவில் விவசாய கண்காட்சி நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.

Update: 2022-11-30 21:18 GMT

மண்டியா:-

மண்டியா (மாவட்டம்) டவுனில் உள்ள வேளாண் தோட்டத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் விவசாய தொழில்நுட்ப மையம் ஆகியவை சார்பில் நாளை(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் விவசாய கண்காட்சி நடத்தப்படும் என்று விவசாய துறை அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த கண்காட்சியில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உரங்கள் பற்றி எடுத்துரைக்கப் போவதாகவும் விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்று விவசாயத்துறை அதிகாரி சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.ஆர்.-64 ரக நெல் விவசாயிகளுக்கு மிகுந்த பலன் தரக்கூடியது. இது குறைந்த காலத்தில் பலன் தரக்கூடிய நெல்ரகம் ஆகும். மேலும் தீவடு நோயினால் இந்த ரக நெற்பயிர் வெகுவாக பாதிக்கப்படாது. மேலும் கே.எம்.பி.-225 ரக நெல்லும் குறைந்த காலத்தில் விளைந்து பலன் தரக்கூடிய நெற்பயிர் ஆகும். இவை தவிர ஆர்.என்.ஆர்.-15048 ரக நெல் புதிதாக வந்துள்ளது. இந்த நெற்பயிர்களின் பருவ காலம், அவற்றின் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதுபோல் இன்னும் ஏராளமான நெற்பயிர் ரகங்கள், விவசாய விளை பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க உள்ளோம். மேலும் ஏராளமான நெல் ரகங்கள், செடிகள், விளை பயிர்கள், விவசாய பொருட்கள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்