அக்னிபத் திட்டம் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம் - ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.;

Update: 2024-02-01 06:45 GMT

பாட்னா,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று பீகார் சென்ற ராகுல் காந்தி கதிஹார் நகரில் ராணுவத்தில் சேர பல ஆண்டுகளாக கடினமாக உழைத்த சில ஆர்வமுள்ள இளைஞர்களுடன் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவில் கூறியுள்ளதாவது,

"ஏற்கனவே ஆயுதப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்களை தற்காலிக ஆள்சேர்ப்பு அக்னிபத் திட்டம் என்ற பெயரில் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுள்ளது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். அக்னிபத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்ட நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்" இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த நியாய யாத்திரை சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீதி வழங்குவதற்காகவும் என்று ராகுல் காந்தி கூறினார். இதனை தொடர்ந்து பீகாரில் இருந்து மேற்கு வங்காளம் புறப்பட்ட இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்