மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் ஆகாசா ஏர் விமான சேவை இன்று தொடக்கம்

மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் முதல் விமான சேவையை அந்த நிறுவனம் இயக்குகிறது.;

Update: 2022-08-07 02:37 GMT

புதுடெல்லி.

பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கி இருக்கும் 'ஆகாசா ஏர்' விமான சேவைக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் சமீபத்தில் அனுமதி அளித்தது. ஆகாசா விமான நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் விமான சேவையை அந்த நிறுவனம் தொடங்க இருக்கிறது. மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் முதல் விமான சேவையை போயிங் 737 மேக்ஸ் விமானத்தைப் பயன்படுத்தி அந்த நிறுவனம் இயக்குகிறது.

விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதித் ஆதித்ய சிந்தியா இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அதே போல் பெங்களூரு - கொச்சி இடையே அந்த நிறுவனம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சென்னை -மும்பை இடையே 'ஆகாசா ஏர் விமான சேவை விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்