திருப்பதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 94 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 94 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update:2022-06-26 13:58 IST

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 94 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை காரணமாக, திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 94 ஆயிரத்து 411 பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து கொண்டனர். இதில், உண்டியல் காணிக்கையாக மட்டும் மூன்று கோடியே நாற்பத்தி ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கப் பெற்றதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் இலவச தரிசனத்திற்காக காத்திருப்பு அறைகள் முழுவதும் நிறைந்த நிலையில் வெளியில் நீண்ட வரிசையில் 16 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்