வாக்காளா் உரிமையை மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பறித்துவிட்டது: திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

காங்கிரசின் அரியானா மாநில தோல்விக்குப் பிறகு, திக்விஜய் சிங், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினார்

Update: 2024-10-12 22:22 GMT

கோப்புப்படம் 

இந்தூர்,

அரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிலும் புகார் செய்துள்ளது. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஒரு வாக்காளர், எனது ஓட்டு எனக்கு விருப்பமான வேட்பாளருக்கு செல்ல வேண்டும். எனது கையால் வாக்குச்சீட்டை வாக்குப்பெட்டியில் போட வேண்டும். இவ்வாறு பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் எண்ண வேண்டும். இது எனது அரசியலமைப்பு உரிமையாகும். இது தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களால் பறிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தபால் வாக்குகளை எண்ணும்போதே 230 தொகுதிகளில் 199 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்ததாக கூறிய அவர், ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்போது வெறும் 66 இடங்கள் மட்டுமே கட்சிக்கு கிடைத்து . இதைப்போலவே அரியானாவிலும் தபால் வாக்குகள் எண்ணும்போது 76 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது. ஆனால் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு எண்ணியபோது 37 இடங்கள் மட்டுமே கிடைத்தது" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்