கேரளாவில் மின்னல் வேகத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்
கேரளா மாநிலத்தில் வயநாட்டைத் தொடர்ந்து கன்னூர் மாவட்டத்திலும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.;
கன்னூர்,
கேரளா மாநிலத்தில் வயநாட்டைத் தொடர்ந்து கன்னூர் மாவட்டத்திலும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னூர் மாவட்டம் கனிச்சார் ஊராட்சிக்குட்பட்ட பன்றி பண்ணையில் இந்நோய் கண்டறியப்பட்டதையடுத்து இதுவரை இந்த பண்ணையில் பாதிக்கப்பட்ட 14 பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக கேரளாவில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவுக்கு பன்றிகள் கொண்டு வரவும் வெளியே கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.