இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமகா இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

Update: 2023-02-11 20:18 GMT

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 2-வது வாரம் தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தற்போதில் இருந்தே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது.

சட்டசபை தேர்தலை நடத்துவது, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக கடந்த 7-ந் தேதியே டெல்லியில் இருந்து 3 குழுவினர் கர்நாடகத்திற்கு வருகை தந்திருந்தனர். இதுவரை 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடனும், தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருந்தனர்.

அதிகாரிகள் ஆலோசனை

குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்கள் பட்டியல் சரிபார்ப்பு, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர் அஜய் பாடு தலைமையிலான அதிகாரிகள் நேற்று யாதகிரி மாவட்டத்திற்கு சென்று, அங்கு சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

பின்னர் கர்நாடக தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் காணொலி காட்சி மூலமாக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் உள்ளிட்டவை பற்றியும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமாா மீனா உள்ளிட்டோர் கலந்து கொணடு இருந்தனர்.

..........

Tags:    

மேலும் செய்திகள்