தேவேகவுடா ஆஸ்பத்திரியில் அனுமதி

தேவேகவுடா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2023-02-28 21:44 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில் ஹாசன் தொகுதியில் தனது மனைவி பவானிக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று ரேவண்ணா கேட்டு வருகிறார். இதற்கு குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அந்த தொகுதியில் கட்சி தொண்டர் ஒருவருக்கு டிக்கெட் வழங்குவதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தேவேகவுடா குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் வழக்கமான உடல் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளேன். இந்த பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு ஓரிரு நாளில் வீடு திரும்புவேன். எனது உடல்நிலை குறித்து யாரும் பயப்பட தேவை இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்