கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் தவறு செய்யவில்லை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான கூடுதல் டி.ஜி.பி அம்ருத்பால் தவறு செய்யவில்லை என்று அவரது மகன் கூறியுள்ளார்.

Update: 2022-12-16 21:21 GMT

பெங்களூரு:-

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது. இதுதொடர்பாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலின் மகன் நுகார் பன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் எனது தந்தையை(கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால்) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே எனது தந்தையின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பணம் இல்லாததால் நாங்கள் வாங்கிய கடனுக்காக தவணைகளை செலுத்த முடியவில்லை. எனது தந்தைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் பல தவறுகள் உள்ளது. எனது தந்தை எந்த தவறும் செய்யவில்லை. அவர் நிரபராதி. அவருக்கு ஜாமீன் கிடைப்பதிலும் பிரச்சினை உள்ளது. எனது தந்தை நிரபாரதியாக வெளியே வருவார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்