வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் சிவமொக்கா கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-11-04 18:45 GMT

சிவமொக்கா;


18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளவும் தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கி உள்ளது.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் அந்த பணியை மேற்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதற்கு சிவமொக்கா மாநகராட்சி காங்கிரஸ் கட்சியின் தலைவி ரேகா ரங்கநாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று மாவட்ட கலெக்டர் செல்வமணியிடம் மனு ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த மனுவில், 'புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

ஆனால் அனைவரும் அதிநவீன செல்போன்களை வைத்திருப்பது இல்லை. அப்படி செல்போன்கள் இருந்தாலும், அவர்களுக்கு தகவல்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை. அதனால் முன்புபோல் விண்ணப்ப படிவங்களை நேரில் சமர்ப்பிக்கும் நடைமுறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்