அதானி குழும விவகாரம்: விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-02-07 07:54 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் அதானி குறித்து மொத்தம் 413 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையை உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு ஆய்வு செய்ய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்