மீண்டும் சினிமாவில் நடிக்கும் நடிகை ரம்யா

மீண்டும் சினிமாவில் நடிகை ரம்யா நடிக்கிறார்.;

Update: 2022-11-04 18:45 GMT

பெங்களூரு: கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர் தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் அரசியலில் இறங்கியதால், திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகினார். தற்போது அவர் மீண்டும் திரையில் தோன்ற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தெரிகிறது.

தனது சொந்த தயாரிப்பு மூலம் அவர் திரைஉலகில் மீண்டும் கால் பதிக்க உள்ளார். விரைவில் உத்தரகன்டா என்ற வடகர்நாடகத்தை மையமாக கொண்ட படத்தின் மூலம் மீண்டும் நடிகை ரம்யா திரையில் தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


Tags:    

மேலும் செய்திகள்