சாலை பள்ளங்களை மூடிய நடிகை காருண்யா ராம்

ராஜராஜேஸ்வரி நகரில் சாலை பள்ளங்களை நடிகை காருண்யா ராம் சீரமைத்ததார்.

Update: 2023-03-02 18:45 GMT

ஆர்.ஆர்.நகர்:-

கன்னட திரையுலகின் இளம் நடிகை காருண்யா ராம். இந்த நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த சாலை பள்ளங்களை மூட நடிகை காருண்யா ராம் முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு காருண்யா ராம் தனது நண்பர்கள்கள், தோழிகளுடன் சாலையில் ஏற்பட்டு இருந்த பள்ளங்களில் மணல் கொட்டி சீரமைத்தார். இதுபற்றி காருண்யா ராம் கூறுகையில், எனது நண்பரின் பெற்றோர் வாகனத்தில் சென்ற போது சாலை பள்ளத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர். மேலும் பெண் ஒருவரும் சாலை குழியில் விழுந்து காயமடைந்தார். இந்த சம்பவங்களால் சாலை பள்ளங்களை மூட முடிவு செய்தேன். அரசையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ எதிர்பார்க்காமல் நாம் நமது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலை பள்ளங்களை மூட வேண்டும். இவ்வாறு செய்தால் பெங்களூரு மாநகரை பள்ளங்கள் இல்லாத சாலையை உருவாக்க முடியும். நமது உயிரை நாம் தான் பாதுகாக்க வேண்டும். சாலை சீரமைத்த போது பலரும் பாராட்டினார்கள். அதுவே எங்களுக்குபரிசு என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்