வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கன்னட நடிகை அபிநயாதேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கன்னட நடிகை அபிநயா போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2023-02-10 18:45 GMT

பெங்களூரு:

கன்னட திரைஉலகில் முன்னணி நடிகைகளுள் அபிநயாவும் ஒருவர் ஆவார். இவர் பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது சகோதரருக்கும், லட்சுமி தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அபிநயாவின் சகோதரர் சீனிவாஸ், வட்தட்சணை கேட்டு லட்சுமி தேவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கு அபிநயா மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் சீனிவாஸ், அபிநயா உள்பட 5 பேர் மீது லட்சுமி தேவி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது பெங்களூரு கோர்ட்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானதால், நடிகை அபிநயா உள்பட 5 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு பெங்களூரு கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அபிநயா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகினர். இதற்கிடையே கடந்த 2022-ம் ஆண்டு அபிநயாவின் தந்தை மற்றும் மற்றொரு சகோதரர் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் நடிகை அபிநயா, அவரது தாய் ஜெயம்மா மற்றும் சகோதரர் சீனிவாஸ் ஆகியோருக்கு எதிராக பெங்களூரு போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்