ராஷ்மிகாவுக்கு, நடிகை ரம்யா ஆதரவு
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு, நடிகை ரம்யா ஆதரவு தெரிவித்து உள்ளார்.;
பெங்களூரு:
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழிப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை விரிவு படுத்தியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், என்னை சில விஷயங்கள் தொந்தரவு செய்கின்றன. சினிமாவில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. என்னை பிடிக்காதவர்கள் பிடிக்கவில்லை என்று சொல்லலாம். தவறில்லை. ஆனால் அவதூறாக கேலி செய்வது சரியல்ல என்று கூறி இருந்தார். மேலும், இந்த சம்பவங்களால் தனது மனம் புண்பட்டதாக அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக கன்னட நடிகை ரம்யா கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தனது கருத்தில் கூறியதாவது:-
நாம் மக்களின் வாழ்க்கையை மதிப்பிடக் கூடாது. வாழ்க்கை என்றால் என்னவென்று அவரவருக்கு தான் தெரியும். கேலி, கிண்டல் பின்தொடரும். நாம் அதை கண்டுகொள்ள வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினர்.