மீண்டும் மிரட்டும் கொரோனா... சிகிச்சை எண்ணிக்கை 5ஆயிரத்தை நெருங்குகிறது

புதிய வகை ஜேஎன் 1 தொற்று அதிகளவில் பரவவில்லை என கூறப்பட்டுள்ளது.

Update: 2024-01-07 10:01 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் புதிதாக 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,049 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளா மற்றும் மராட்டியத்தில் தலா 2 பேரும் ஜம்மு காஷ்மீரில் ஒருவரும், மொத்தமாக 5 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

டிச.5 வரை இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை அதன் பிறகு புதிய தொற்று மற்றும் குளிர்காலம் காரணமாக அதிகரித்து வருகிறது.

அதிகபட்சமாக டிச.31 அன்று 841 பேருக்கு தொற்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டது. இதில் பெரும்பான்மையானவர்கள் வீட்டில் தனித்து இருந்து சிகிச்சை பெற்று குணமாகினர்.

புதிய வகை ஜேஎன் 1 தொற்று அதிகளவில் பரவவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்தியா இதுவரை 3 கொரோனா அலைகளை எதிர்கொண்டுள்ளது. 2020-ல் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து 4.5 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5.3 லட்சம் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்