இந்தோனேசிய சிறையில் வாடும் 3 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசிடம் காங்கிரஸ் கோரிக்கை

இந்தோனேசிய சிறையில் வாடும் 3 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2022-11-18 01:14 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் விஸ்வாஸ் சப்கலை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி அந்தமானில் இருந்து மீன் பிடிக்க எந்திர படகில் சென்றனர். அவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் வந்ததாக கடந்த மார்ச் 7-ந்தேதி, இந்தோனேசிய கடற்படை கைது செய்தது.

படகை பறிமுதல் செய்தது. அவர்களில் 4 மீனவர்கள் ஏப்ரல் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். ஜெசின் தாஸ் என்ற மீனவர், சித்ரவதை காரணமாக உயிரிழந்தார்.

எனவே, இந்தோனேசிய சிறையில் வாடும் மீதி உள்ள 3 இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்