சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் மீது நடவடிக்கை-குமாரசாமி பேட்டி

சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-28 21:35 GMT

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, பி.எப்.ஐ. அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அமைப்பு எதுவாக இருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்.ஐ.ஏ. சோதனையில் கிடைத்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். எந்தெந்த அமைப்புகள் தேசத்துரோக செயலை செய்துள்ளது, கலவரத்தை ஏற்படுத்த எந்த ரீதியில் தூண்டி விடுகிறார்கள் என்பது குறித்த தகவல்களை வெளியிட வேண்டும். அந்த அமைப்புக்கு தடை விதித்தவுடன் நாட்டில் அமைதி நிலவிவிடும் என்று கூற முடியாது. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து நல்லிணக்க்கத்தை பேணும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு அமைப்புக்கு தடை விதித்து விட்டால் அமைதி ஏற்பட்டுவிடாது. ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். நாடு எப்போது உடைந்து போனது என்று எனக்கு தெரியவில்லை. கர்நாடகத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அவசியம். அதை விடுத்து யாத்திரை நடத்துவதாலோ அல்லது 'பே-சி.எம்.' குறித்து போராட்டம் நடத்துவதாலோ பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்