அமலாக்கத்துறை இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்

பதவியேற்ற நாளிலிருந்து 2 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை ராகுல் நவீன் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-08-14 15:16 GMT

புதுடெல்லி,

 அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வந்தார். அவரது பதவி நீட்டிப்புக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் பதவி விலகினார்.

ராகுல் நவீன் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அமலாக்கத்துறையின் புதிய இயக்குநராக ராகுல் நவீன் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அமலாக்கத்துறை இயக்குநராகச் செயல்படுவார். பதவியேற்ற நாளிலிருந்து 2 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை ராகுல் நவீன் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1993-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரியான ராகுல் நவீன், 2019-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை சிறப்பு அதிகாரியாகச் செயல்பட்டவர். அந்தத் துறையின் மூத்த அதிகாரியாகவும் உள்ளார். இந்திய வருவாய்த்துறையின் கூடுதல் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்