விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் - சிகிச்சையின்போது ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த இளைஞருக்கு சிகிச்சையின்போது ரத்த வகை மாற்றி செலுத்தப்பட்டதில் அவர் உயிரிழந்தார்.

Update: 2024-02-23 21:10 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் பண்டிஹு பகுதியை சேர்ந்த இளைஞர் சச்சின் சர்மா (வயது 23). இவர் கடந்த 12ம் தேதி பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

விபத்தில் படுகாயமடைந்த சச்சின் சர்மா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அறுவை சிகிச்சை நடைபெற்றுகொண்டிருந்தபோதே சச்சின் சர்மா உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான சச்சின் சர்மாவின் ரத்தவகை

'ஓ+' ஆகும். ஆனால், அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக சச்சின் சர்மாவுக்கு 'ஏபி+' ரத்தவகை செலுத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின்போது சச்சின் சர்மாவுக்கு மாற்று ரத்தம் செலுத்தப்பட்டதால் அவரின் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சச்சின் சர்மா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் செயல்பட்டுவந்த 3 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்