ஜீப் கவிழ்ந்து வாலிபர் சாவு-10 பேர் படுகாயம்

ஜீப் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ௧௦ பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-08-03 20:59 GMT

பெங்களூரு:


பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா குலகேரி அருகே கெரூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஜீப் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த ஒருவர் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் கெரூர் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், விபத்தில் பலியானவர் முதோல் தாலுகா சிக்கலகுந்தி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் படிகேர்(வயது 34) என்று தெரிந்தது. கிரே அலகுந்தி கிராமத்தை சேர்ந்த 11 பேர், தாவணகெரேயில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பாகல்கோட்டையில் இருந்து ஜீப்பில் வந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து கெரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்