குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்தவர் மும்பையில் கைது

குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்தவர் மும்பையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-05 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் ஜெப்பினமெகரு பகுதியை சேர்ந்தவர் பிரீத்தம் ஆச்சார்யா (வயது 38). அவர் அந்தப்பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனை அறிந்த பிரீத்தம் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரீத்தம் மும்பையில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

அவர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரீத்தமை மங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்